Google Groups Subscribe to முத்தமிழ்
Email:
Browse Archives at groups.google.com
Google Groups முத்தமிழ்
Browse Archives at groups.google.com

Thursday, April 06, 2006

கம்பனின் ஓவியமும் உள்ளமும் - இரவா

கம்பனின் ஓவியமும் உள்ளமும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இராமனின் கையிலுள்ள கோதண்டத்தில் பொருத்தக்கூடிய அம்பு இருக்கின்றதே, அது, எப்படிப் பட்டது! தெரியுமா? என்று, கூறவந்த கம்பன், அம்பையும் சொல்கிறான். தன் உள்ளக்கிடக்கையையும் கூறுகிறான்.


"நல் இயல் கவிஞர் நாவில்
பொருள் குறித்து அமர்ந்த நாமச்
சொல் என, செய்யுள் கொண்ட
தொடை என, தொடையை நோக்கி
எல்லை இல் செல்வம் தீரா
இசை என, பழுது இலாத
பல் அலங் காரப் பண்பே
காகுந்தன் பகழி மாதோ!


கவிஞன், தான் அதிகமாகப் பார்க்கும் பொருளை, எண்ணும் கருத்தையே தன் கவிதைகளில் உவமையாகக் கொள்வான். கம்பன் அதிகமாக எழுதுவது, கவிதை! கவிதையென்றால் எப்படியிருக்கவேண்டும்! என்று, விளக்குவது போலக் கூறுகின்றான்.


கவிதைக்குச் சொல் வேண்டும்! அச்சொல் துணிந்த சொல்லாக இருக்கவேண்டும்! உறுதியானச் சொல்லாகவும் இருக்கவேண்டும்! என்று கூறுவார்கள். அதைப் போலத் தேர்வுச் செய்யப்படும் சொல்லில் உறுதி இருக்கவேண்டும்.

செய்யுளை மாலைபோன்று கட்டுதற்கு, உருப்பிலக்கணத்தைக் கொண்ட தொடையலங்காரம் வேண்டும். அவ்வாறு அலங்காரம் செய்த செய்யுளைப் பாடுகின்ற போது, தொடையின் சிறப்பைத் தோற்றுவிப்பதுடன் எடுக்க எடுக்கத் தீராத செல்வத்தைப் போன்ற இசையைப் பெருக்கும்.


அதைப்போலவே, இராமன் கையில் இருக்கும் வில்லில் இருக்கும் அம்பும் குற்றம் என்று கூறமுடியாத அளவுக்குச் சிறப்புற்று விளங்கும் தன்மைகளைக் கொண்டிருக்கின்றது,

இரவா

--~--~---------~--~----~------------~-------~--~----~
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.
-~----------~----~----~----~------~----~------~--~---

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4