Google Groups Subscribe to முத்தமிழ்
Email:
Browse Archives at groups.google.com
Google Groups முத்தமிழ்
Browse Archives at groups.google.com

Monday, April 10, 2006

வருடத்தின் நூறாவது நாள்-விழியன்

ஏப்ரல் 10 :

வருடத்தின் நூறாவது நாள். இதில் என்ன சிறப்பு இருக்கின்றது என்ற கேள்வி எழலாம்.சிறப்பு என்று எதுவும் இல்லை.ஆனால் பல மாறுதலுக்கான அழைப்பாக இருக்கலாம்.
இந்நாளில் இல்லை சிறப்பு
உங்கள் மாறுதலுக்கான அழைப்பு..

நம்மில் 90% சதவிதத்தனர் வருடத்திம் துவக்கத்தில், அதாவது ஜனவரி ஒன்றாம் தேதி உற்சாகமாக எழுவோம். சரி இந்த வருடம் முதல் தினமும் இவற்றை எல்லாம் செய்வோம் என்று பட்டியல் இடுவோம். எடுத்து காட்டாக, தினமும் காலை 6 மணிக்கு எழுவது (இதுவே தாமதம் தான்), உடற்பயிற்சி செய்வது (நம்மை போல கணிணி முன்னர் நாள் முழுதும் காலம் தள்ளும் மனிதர்களுக்கும், மானிட்டரில்(Monitor) மூழ்கும் மானிடர்களுக்கும் மிக அவசியம்), புத்தகம் வாசிப்பது, தினமும் டையரி எழுதுவது, இன்னும் அவரவர் அவசியத்திற்கேற்ப, தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு உறுதிமொழிகள்(Resolutions) எடுத்திருப்போம்.

இவற்றை நாம் தவறாமல் பின்பற்றுகின்றோமா என்பது தான் கேள்வி. முடிவுகள் எடுத்த உற்சாகத்தில் நாம் ஒரு வாரம், இல்லை பத்து நாள் விடாப்பிடியாக செய்து முடிப்போம். பின்னர் ??? அதே உறுதிமொழிகளை அடுத்த வருடம் எடுப்போம் சில மாறுதல்களோடு..மீண்டும் அதே நிலை..நான் சொல்வது 90% மக்களுக்கு. நீங்க அந்த 10% இருந்தால் ஆனந்தம் தான்.

சரி, இந்த வருடம் ஆரம்பித்து 100 நாள் இன்றோடு முடிகின்றது. சென்சுரி அடிச்சாச்சு. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாட்கள் ஓடிக்கொண்டு தான் இருக்கின்றது. ஒரு சின்ன ப்ரேக் எடுத்து நூறு நாளுக்கான ஒரு பத்து நிமிட ஆய்வு நடத்தலாமா?
வெண்தாளும் எழுதுகோளும் தயாரா?
1. உங்கள் உறுதிமொழிகளை எழுதுங்கள்
2. அதில் எவ்வளவு தூரம் நடைமுறைப்படுத்தியுள்ளீர்?
3. சருக்கலுக்கான காரணம் என்ன?

தவறிப்போன செயல்களுக்கும் காரணம் யாரும் அல்ல.நீங்கள் தான். நீங்கள் தான் அனைத்திற்கும் பொறுப்பு. வெற்றிக்கும் சரி தோல்விக்கும் சரி. ஆனது ஆகிவிட்டது இனி இறந்த காலத்தை பற்றி பேசிப்பயனில்லை. எதிர்காலத்தை பற்றி பேசுவோம்.

*எடுத்த உறுதிமொழிகளை மறுபார்வை இடுங்கள்.
*எவற்றை கண்டிப்பாக செய்ய போகின்றீர் என்று உறுதி செய்யவும்
* சிறிது சிறிதாக முடிக்கவும். உதாரணமாக தினமும் வாக்கிங் செல்லவேண்டும் என்று முடிவெடுத்துள்ளீர் என்று வைத்துக்கொள்வோம். முதல் நாளே 2 கி.மீட்டர் நடக்கவேண்டாம். முதல் நாள் 100 அடி நடவுங்கள் போதும்.ஔஉங்கள் மனதிடம் "நான் இன்றைய வேலையை செய்துவிட்டேன்" என 5 முறை கூறவும்.அடுத்த நாள் 200 அடி..அப்படியே படிப்படி....
* எல்லா காரியத்தையும் இப்படி சின்ன சின்னதாக ஆரம்பித்தால் நலம்.உங்களுக்குள்ளேயே தன்னம்பிக்கை உயரும்.
* அதே சமயம் ஆரம்ப கட்டத்திலேயே இருப்பது நன்றல்ல.(ஒரே இடத்தில் முன்னேறாமல் இருப்பது சாக்கடை என சொல்லுவார்கள்). முன்னேற்றம் இருந்து கொண்டே இருக்கவேண்டும்.
* முதலில் கடினமாக இருக்கும். பின்னர் பழகிவிடும்.

முன்பே சொன்னது போல எல்லாவற்றிற்கும் காரணம் நீங்கள் தான்.நீங்கள் மட்டும் தான்.

வருடத்தின் நூறாவது தின வாழ்த்துக்கள்.

நான் முடித்துவிட்டேன். இனி நீங்கள் துவங்கலாம்.

^^ விழியன் ^^
http://vizhiyan.wordpress.com

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4