Google Groups Subscribe to முத்தமிழ்
Email:
Browse Archives at groups.google.com
Google Groups முத்தமிழ்
Browse Archives at groups.google.com

Tuesday, April 11, 2006

'எங்களுக்கும் காலம் வரும்

என் முத்தமிழ் உள்ளங்களே அனைவருக்கும் வணக்கம்,
வாராவாரம்...வளவினுக்குள் வர வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.ஆனால்
நேரம் என்னை விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டு விடுகின்றதே என்ன செய்ய?!!..
வேந்தன் அண்ணா எழுதி இருந்தார் இயந்திர வாழ்க்கை என்று!...உண்மைதான்..
எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கின்ற வாழ்க்கை. காலநிலையோடும் போராடி நேரத்தோடும் விழுந்தோடி ஓரளவுக்கு வாழ்வின் நிலையை சம நிலைப்படுத்திய படி சமாளிக்கின்றோம்...

எப்ப்படி ஓடிவிட்டது மூன்று மாதங்களும்!!! இப்போது நான்காம் மாதத்தின் நடுவிலும் நிற்கின்றோம்.' காலம் கண்போன்றது" காலம் பொன்போன்றது" என்று சொல்லி வைத்தவர்கள் வாயில் சர்க்கரை அள்ளிப்போடவேண்டும். நினைத்துப்பார்க்கும் போது இனிக்கும் நினைவுகள் தந்திருக்கின்ற நேரங்கள், வருந்த வைக்கின்ற நேரங்கள். வியப்பளிக்கின்ற நேரங்கள். பாடமாகீன்ற நேரங்கள்..இப்படி நமக்கு ஏகப்பட்ட நேரங்கள்..

ஒவ்வொரு விடியலும் இரவைக்கிழிக்கின்றது ஆகவே இரவுகள்(துன்பங்கள்) நிரந்தரமில்லை என்பதை காலமே நமக்கு கற்றுத்தருகின்றது. இரவோடு சேர்ந்து பகலும் இருந்தால் மட்டுமே ஒரு நாள். ஆக "காலம்" இன்பம், துன்பம் இணைதலே வாழ்க்கை என்பதையும் சுட்டித்தருகின்றது.

'எங்களுக்கும் காலம் வரும்!
காலம் வந்தால் வாழ்வு வரும்'
வாழ்வு வந்தால் அனைவரையும்
வாழ வைப்போமே" என்று காலத்தை பாசமலரில் பதித்தார் கவிஞர் கண்ணதாசன் அவர்கள்.

ஆக நல்லதே நினைத்துவிட்டால் நல்லதே நடக்கும், இதையே நீ எதுவாக நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகின்றாய் என்றார் சுவாமி விவேகானந்தர்.

'செய்ததற்காக எப்போது வருந்தி விட்டாயோ அதை தவறென்று உணர்ந்து விட்டாயோ அதற்குப்பிறகு அந்த சிந்தனையில் உன் காலத்தை கரைத்து விடாதே என்றார் சுவாமிகள்.

ஆகவே...நேற்று என்பது இறந்துபோனது..நாளை என்பது நாம் அறியாதது...இன்று மட்டுமே எங்கள் கைகளில். அதை வென்று முடிப்பதே நம் கடமையானது. ஆகவே கடமையைச் செய்வோம்...

எங்களுக்கு பாடம் சொல்லித்தந்த காலம் எத்தனையோ!!. நாம் யாருக்கு பாடமாகப்போகின்றோம்"..??? இந்த கேள்வியால் பல ஓட்டைகள் மனசில்.....அதாவது அடிக்கடி மனதை துளைக்கும் கேள்வி இது"

.மகானாக வேண்டாம், மகாத்மா ஆக வேண்டாம். மனிதனாக வாழ்ந்தாலே போதும். !! நிறையச்சொல்ல நினைத்ததில் ஒரு துளியைமட்டுமே தூவி விட்டிருக்கின்றேன்....சுவைத்துப்பாருங்கள். உங்கள் சுவையைக் கூறுங்கள்.

தொடர்ந்து மறுவாரம் சந்திப்போம்





முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.
-~----------~----~----~----~------~----~------~--~---


--

என்றென்றும் நட்புடன்
+நம்பிக்கையுடன்

உங்கள் சுதனின்விஜி

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4