Google Groups Subscribe to முத்தமிழ்
Email:
Browse Archives at groups.google.com
Google Groups முத்தமிழ்
Browse Archives at groups.google.com

Wednesday, May 31, 2006

வேலை வேண்டும்!

வேலை வேண்டும்!

காசுகேத்த தோசை
கடை தெருவில கிடைக்கும்
படிப்புகேத்த வேலை
பாரதத்துல உண்டா?

வேலை தான கேட்டோம்
கலர் டிவியா கேட்டோம்
கஞ்சியவே காணோம் டிவி
கரண்டுக்கெங்க போக!

சினிமா பாத்தகூட்டம்
இன்னும் செலவாகவேவில்லை
டிவிய நீ கொடுத்து எங்க
பொழைப்பக் கெடுக்க வேணாம்!

தூண்டியைத்தான் கொடுத்தா
மீன நாங்க புடிப்போம்
பொழைக்க வழிகேட்டோம்
பொதைக்க வழிவேணாம்!
அன்புடன்

தியாகு

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4