Google Groups Subscribe to முத்தமிழ்
Email:
Browse Archives at groups.google.com
Google Groups முத்தமிழ்
Browse Archives at groups.google.com

Thursday, April 20, 2006

நானறியாத குறிக்கோள்

முதல் கட்டம்:
நடக்கத் தொடங்கினேன். என் எதிரே ஒரே ஒரு பாதைதான் இருந்தது. நடந்தேன். எல்லாக் குறிக்கோள்களையும் அடைய அந்த ஒரு பாதை தான். குதித்துக் கொண்டு நடந்தேன்.


இரண்டாம் கட்டம்:

பாதை இரண்டாக பிரிந்து இருந்தது. ஒவ்வொரு பாதையும் குறிக்கோள்களை சமமாகப் பிரித்துக் கொண்டு இருந்தன. இப்போது சில ஆசைகளை, குறிக்கோள்களை கண்டிப்பாக துறக்க வேண்டி இருந்தது.

ஒரு பாதையில் கிடைப்பது மறு பாதையில் இல்லை.

சில காலம் அங்கேயே நின்று யோசித்ததில் கழிந்தது.

பின் ஒரு பாதையை தேர்ந்தெடுத்து நடந்தேன்.

மூன்றாம் கட்டம்:

இங்கே பாதை நான்காய் பிரிந்து இருந்தது. ஒவ்வொரு பாதையும் ஒரு சில குறிக்கோள்களுக்கு மட்டும்.

ஒன்றில் எனது இன்ப நாட்டங்கள்; ஒன்றில் எனக்கு உண்மையான நன்மை பயக்கும் விஷயம். பாதைகள் எவ்வளவு தொலைவு போகும் என்பதும் புரியவில்லை. இன்பத்தை அளிக்கும் விஷயங்களை தரும் பாதை அதிக நேரம் நடக்க தேவையின்றி இருந்தது.

இந்த பாதை பிரியும் இடத்தில் நிறைய பேர் இல்லம் கட்டிக் கொண்டு தங்கி இருந்ததை பார்த்தேன். காலனி போல்.

இங்கு சில காலம் தங்க வேண்டி இருந்தது. எனக்கு முடிவெடுக்க அந்த காலம் தேவையாய் இருந்தது.

பின் ஒரு பாதையை தேர்ந்தெடுதேன். அதில் நடக்கும் போது நிறைய பேர் திரும்ப என் எதிரே நடந்து வருவதைப் பார்த்தேன்.

நான்காம் கட்டம்:

இங்கே பாதை ஒவ்வொரு குறிக்கோளுக்கு ஒன்றாய் பிரிந்திருந்தது. இங்கே சில காலம் தங்கினேன். இடம் மிக அருமையாக இருந்தது.

ஆனால் எனது குறிக்கோள்கள் எனது கட்டத்திற்கு ஏற்ப மாறி மாறி இருந்தது. அறிவு வளர குறிக்கோள்களும் மாறும் என உணர்ந்தேன்.

இப்போது புது பிரச்சனை. எதை என் குறிக்கோளாய் கொள்வது. மாறும் எனது அறிவின் மீது எனக்கு பிடிப்பு இல்லை.

சில காலம் கழிந்தது.

ஐந்தாம் கட்டம்:

இங்கே பாதைகள் குறைவாய் தான் இருந்தன. ஆனால் ஒவ்வொரு பாதைகளும் எதற்கென இருக்கிறது என்பதை என் அறிவால் அறிய முடியவில்லை.

அந்த குறிக்கோள்களை புரிந்துக் கொள்ளவே ஏகப்பட்ட அறிவு தேவை.

நிறைய பேர் இங்கு நிரந்தரமாக தங்கியிருந்தனர்.

யோசிக்காமல் பட் பட் என முடிவு எடுத்திருந்தால் ஒருவேளை முடிவை எட்டியிருக்கலாமோ என்று தோன்றியது. இப்படி வயதாகிவிட்டதே..இனி எப்படி நடப்போம் என்ற வருத்தம்.

என் அருகில் இருந்த இளைஞன் புன்னகைத்தான். என் எண்ணவோட்டத்தை அவன் படித்தறிந்துவிட்டான் என்பது புரிந்தது.

அவன் சொன்னான்:
"நான் யோசியாமல் முடிவெடுத்து தான் வந்தேன். விரைவிலும் வந்து சேர்ந்தேன். ஆனால் என் குறிக்கோளுக்கும், என் இயற்கைக்கும் இது தவறான இடமாகி விட்டது. இனி திரும்ப போக வேண்டும்."


சொல்லிவிட்டு வந்த வழியே திரும்ப சென்றான்.

குறிக்கோள் அறிவின் வளர்ச்சிக்கு ஏற்ப மாறுவதைக் கண்டு அறிவை சாராமல், ஏதும் எண்ணாமல் அமைதியாய் இருந்தேன்.

பாதைகள் என்னை நோக்கி நகர ஆரம்பித்தன. நானறியாத குறிக்கோள் என்னை நோக்கி வர ஆரம்பித்தது.


காழியூரன்




--~--~---------~--~----~------------~-------~--~----~
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.
-~----------~----~----~----~------~----~------~--~---

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4