Google Groups Subscribe to முத்தமிழ்
Email:
Browse Archives at groups.google.com
Google Groups முத்தமிழ்
Browse Archives at groups.google.com

Sunday, October 08, 2006

தேர்தலோ தேர்தல்!

தேர்தலோ தேர்தல்!

உள்ளாட்சித் தேர்தல் வந்தாலும் வந்தது. கிராமப் புற தமிழகம் அதிர்கிறது.

முதல் சில நாட்கள் பஞ்சாயத்துக் கூட்டங்கள் மின்னல் வேகத்தில் கூடின, உறுப்பினர்களை போட்டியின்றி தேர்ந்தெடுக்கத்தான். ஆனால் தங்கள் கிராம உறுப்பினர் பதவிகளை ஏலம் விட முடிந்த இடங்களில் மட்டும் சமரசம் ஏற்பட்டது. ஏலத்தின் சராசரி விலை 2000-3000 ஓட்டு உள்ள கிராமத் தலைவர் பதவி 5 இலட்சம் ரூபாய். அரசு என்ன செய்து கொண்டு இருக்கிறது என்றெல்லாம் புத்திசாலித் தனமாக யாரும் கேட்கக் கூடாது. மற்ற இடங்களில் எல்லாம் மனுத் தாக்கல் படலம்தான்.

மனு தாக்கலுக்கு பக்கத்தில் உள்ள நகரங்களுக்குத் தான் இவர்கள் செல்ல வேண்டும். சும்மா சென்றால் இவர்கள் செல்வாக்கு தெரிவது எப்படி. ஆள்படை திரட்டிக்கிட்டு டிராக்டர், டெம்போ, ஆம்னி பஸ், வேன், லாரி மற்றும் ஆட்டோக்களோட இவங்க விட்ட அலம்பல்ல அந்தந்த ஊரும் ஆடிடுச்சு. ஒட்டல்ல சாப்பாடு கிடைக்கல, காய்கறி மார்கெட் காலி மார்கெட் ஆயிடுச்சு, ஊர்வன, பறப்பன மற்றும் நடப்பன எல்லாத்துக்கும் கும்ப கும்பலா சொர்க்கலோக பதவிதான். தண்ணிக்கு பஞ்சமே இல்ல.

அப்புறம் சாம, தான, பேத மற்றும் தண்டம் உபயோகித்து வாபஸ் வாங்கச் செய்யும் படலந்தான்.

அடுத்து துண்டு விளம்பரம், சுவரொட்டி வீட்டு சுவறுகள நிரப்ப, இப்ப பிரச்சார நேரம். ஒரே வேசம்- கையை குவிசு வணக்கம், அவங்கவங்க கால்ல விழறது, உறவு முறை சொல்லி ஓட்டுப் போடுங்கன்னு வேண்டுகோள். இரவுகள்ள தண்ணி சப்ளை.இதேதான்.

அடுத்து நடக்க இருப்பன

தேர்தலுக்கு முதல்நாள் பணம் ஒட்டு 50 - 500 வரை, அடிதடியோட அப்பப்ப ஒட்டு போடறமாதிரி தேர்தல், வாக்கு எண்ண படைபலத்தோட கலாட்டா, வெற்றிக் கொண்டாட்டம், ஒவ்வொரு அரசியல் கட்சியும் தான்தான் வென்றதாக ஒரு அறிக்கை.

இதில நீக்கமற நிறைந்திருந்தது பாட்டில், பணம் மற்றும் சாதி. காந்தி பிறந்தாள் அன்றுகூட இரட்டிப்பு விலையில சரக்கு கிடைச்சது.

மக்கள் கூட கேட்க மறந்த்தது வேட்பாளர்களின் கொள்கை மற்றும் வாக்குறுதி.

வாழ்க சனநாயகம்.

-சுரேஷ்பாபு.
--~--~---------~--~----~------------~-------~--~----~
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.
-~----------~----~----~----~------~----~------~--~---

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4