Google Groups Subscribe to முத்தமிழ்
Email:
Browse Archives at groups.google.com
Google Groups முத்தமிழ்
Browse Archives at groups.google.com

Tuesday, March 07, 2006

இளங்கோ அடிகள்

இம்முறை 'இளங்கோ அடிகள் சொன்ன நல்வார்த்தைகள் அத்தனையும் கோர்வையாக!!!

***'கடவுள் உண்டு என்று நம்புங்கள். கடவுளை உணர்ந்த பெரியோர்களை விரும்புங்கள்.

***பொய் கூறுவதற்கு அஞ்சுங்கள், பிறர் மேல் புறங்கூறுதலைக் கைவிடுங்கள்

***தவ ஒழுக்கங்கள் பலவும் மேற்கொள்ளுங்கள். பிறர் செய்த உதவிகளை மறவாதிருங்கள்.

*** தீயவர்களின் தொடர்பை இகழ்ந்து ஒதுக்குங்கள். பொருள் நிறைந்த அறிவுரைகளை இகழாதீர்கள்.

***அறநெறியிற் செல்லும் சான்றோர்களின் திருக்கூட்டத்திற்கு இடைவிடாமல் சென்று பழகுங்கள்

***மறநெறிச் செல்லும் தீயவர்களீன் தொடர்பினின்று விடுபட்டு, தப்பி ஓடி உய்ய முயலுங்கள்.

***பிறர்மனைவியை நெருப்பென நினைத்து அஞ்சுங்கள். துன்புற்று வருந்தும் உயிர்களைக்காப்பாற்றுங்கள்.

***இல்லறக்கடமைகளை தவறாது போற்றுங்கள். பாவச்செயல்களை கடிந்து முயன்று நீக்கிவிடுங்கள்.

**கள்ளும், களவும்,காமமும், பொய்யும், ஆகிய குற்றங்களையும் அறிவிலிகளாகிய வீணர்களீன் தொடர்பையும் தந்திரமாக ஒழித்துவிடுங்கள்.

***இவ்வுலகத்தில் நம்முடைய இளமையும், செல்வமும், யாக்கையும் ஒரு சிறிதும் நிலை உடையன அல்ல.நமக்கு என்று அளவிடப்பட்டுள்ள வாழ்நாள் கழியாமல் ஒரு கணமும் நில்லாது, நமக்கு வரவேண்டிய துன்பங்கள் வந்தே தீரும்.

ஆதலால் காலம் உள்ள போதே இவ்வுலகத்தினின்று இறந்த பின்னர் நாம் செல்வதற்குரிய மறுமை உலகத்திற்கு உற்ற துணையாகிய அறங்களைச்செய்து தேடிக்கொள்ளுங்கள்.

சொன்னவர்:

இளங்கோ அடிகள்..


--
என்றென்றும் நட்புடன்
+நம்பிக்கையுடன்
உங்கள் சுதனின்விஜி

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பதுவும்,
உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும்,
ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பதாலும்...
நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்."

மதுரைய எரிச்சாளே கண்ணகீஈஈஈ...
வேங்கை மரத்தடியில நின்னு சூரியனைத் தன் கூரிய விழியால் முறைச்சாளே..
ஏய் கதிரவனே... நின் எரிதழலால் பொசுக்கிடுக..ன்னு ஆணையிட்டாளே..

அதயெல்லாம் மறக்க நாம என்ன அரசியல்வாதியா?

ம்ம்ம்... என்னமோ போங்கப்பா..
இந்தக் காலத்து புள்ளிங்களுக்கு விகரமே பத்தல..

"மேச்சேரி மம்புட்டியாராம் சிங்கத்தின் பாட்டு
ஆச்சரியமான கத நில்லுங்க கேட்டு.............
......................................................................."


---------------
அரங்கன் - மஞ்சுமலை - கொள்ளேகால்.

ஆடி மகிழ்ந்திருக்கும் சோலை

ஆடி மகிழ்ந்திருக்கும் சோலை! - தமிழை
அருந்தி மகிழ்ந்திருக்கும் ஓலை!
கூடி மகிழ்ந்திருக்கும் குழுமம்! - தமிழால்
குளிர்ந்து மகிழ்ந்திருக்கும் மடலம்!
தேடி மகிழ்ந்திருக்கும் நண்பு! - இன்பம்
திளைக்க மகிழ்ந்திருக்கும் அன்பு!
நாடி மகிழ்வளித்தே என்னை! - இங்கே
நாளும் மகிழ்விக்கும் கம்பன்.
பனை ஓலை சுவடியில் காதல் ஓலை வரைந்து இந்துவுக்கு அனுப்பியவர் யாரோ
யாமரியோம் பராபரமே
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


அமுதே வருக! வருக

இரவா - கபிலன்

தித்திக்கும் ஆரமுதே! 'இந்து' என்னும்

தென்னகத்துத் தாமரையே! தொட்டுப் பார்த்தே

சுற்றுகின்ற பூங்கொடியே! இதயத் துள்ளே

துளிர்கின்ற புன்னகையே! கடைக்கண் காட்டிப்

பற்றிக்கும் பைம்பொழிலே! இளமை துள்ளும்

பஞ்சணையின் பரவசமே! நிலவும் கூசும்

முத்துப்பல் பூச்சரமே! என்றன் நெஞ்சில்

மூழ்கிவிட்ட திருவிளக்கே! அமுதின் தேரே!



எதற்கென்னைத் திருடினாய்? என்னைக் கேட்டால்

இல்லையென்று சொல்வேனா? கொள்ளைக் காரி!

எதற்காகச் சிரிக்கின்றாய்? இரவுக் கனவும்

எரிதணலாய் ஆச்சுதடி! சிறகு கட்டிப்

பறக்கின்ற நினைவுகளும் உன்னைச் சுற்றிப்

பரிவட்டம் கட்டுதடி! பட்டைத் தொட்டும்

உறங்காமல் கிடக்குதடி! ஊமை நெஞ்சும்

உனைத்தேடித் தவிக்குதடி! வருக, மீண்டும்!



மறுபடியும் வருவாயா? மனதுக் குள்ளே

மந்திரமும் தருவாயா? செவிக்குள் இன்பம்

நடுவதற்கு வருவாயா? இதயத் துள்ளே

நடைபோட்டு மகிழ்வாயா? தங்கத் தொட்டில்

அசைவதுபோல் வருவாயா? அன்பில் பொங்கும்

அருவிபோல் வருவாயா? உயிர்க்கு வேண்டும்

அமுதத்தைத் தருவாயா? மதுவின் தேரல்

அடையாக வருவாயா? அழகே, சொல்! சொல்!



சித்திரமே நீ, எனக்கு! அமுதின் ஊற்றாம்

செங்கனிதான் நீ, எனக்கு! நீயும் நானும்

பத்திரமாய் இரவுக்லுள் பதுங்கிக் கொள்வோம்!

பசுங்குளிர்தான், என்னுயிர்க்கு! நெஞ்சம் பூக்க

நித்தமொரு கவிபடைப்பேன்! இன்ப வெள்ளம்

நிறைந்திடவே அணையெடுப்பேன்! தமிழைப் போன்ற

புத்தகமாய் உனைப்படிப்பேன்! பட்டு மெத்தைப்

பனிக்கடலில் மிதந்திருப்பேன்! வருக, அன்பே!



காலத்தை வென்றிடலாம்! இதயம் மூட்டும்

கனலுக்குள் வெந்திடலாம்! காத லாலே

ஞாலத்தை அளந்திடலாம்! கனவித் தேரில்

நாமிருவர் பறந்திடலாம்! இனிமை வெள்ள

அலைநடுவே மிதந்திடலாம்! மாறி மாறி

அமுதத்தைப் பகிந்திடலாம்! நமக்குள் நாமே

சோதிக்கக் கிடந்திடலாம்! உயிரை மாற்றி

ஆதிக்கம் செய்திடலாம்! அமுதே வா! வா!



சாய்ந்தாலும் கோபுரந்தான்! கொங்கை முற்றிச்

சரிந்தாலும் மாமலைதான்! காதற் கண்கள்

காய்ந்தாலும் செம்மலர்தான்! இதழின் தேரல்

கரித்தாலும் செங்கனிதான்! மலரின் கைகள்

ஆய்ந்தாலும் அணிகலந்தான்! பட்டு மேனி

அசைந்தாடும் பூங்கொடிதான்! தென்றல் போலப்

பாய்ந்தாலும் மானினந்தான்! தமிழால் கொஞ்சிப்

பசியாற்றும் பைந்தமிழே, இந்து, நீ, வா!



நெஞ்சுக்குள் இடங்கொடு! கவிஞன் என்றன்

நெஞ்சுக்கும் நிலைத்திடு! அன்பில் பூக்கும்

மஞ்சத்தில் மகிழ்ந்திடு! மனித வாழ்வை

மதித்துமே இணைந்திடு! இதயந் தேடும்

அஞ்சுகமாய் இருந்திடு! இன்னும் என்றும்

அருகினிலே அமர்ந்திடு! உயிரே என்னில்

தஞ்சமாய் வந்திடு! தமிழைப் போலத்

தளிர்த்து நீ, வாழ்ந்திடு! வாழி, இந்து!



இனிக்கின்ற நிலவாக இருப்ப தென்றால்

என்னுடனே இருந்து போ! இல்லை யென்றால்,

பனி போலே எனைவிட்டுத் தேய்வ தென்றால்

பாசத்தைக் காதலை நீ அறிவ தென்றோ?

இனிக்கின்ற காதல்தான் வரலா றாகும்!

இகழ்கின்ற மற்றெல்லாம் கவிஞர்க் கில்லை!

கனிக்குவியல் தேன் பொழியும் 'இந்து', செந்தேன்

கவிவடிக்கும் மாளிகைக்குள் வாழ்க! நீயே!

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4