Google Groups Subscribe to முத்தமிழ்
Email:
Browse Archives at groups.google.com
Google Groups முத்தமிழ்
Browse Archives at groups.google.com

Thursday, July 27, 2006

ஞாபகம்.

எழுதியவர் வினோத்

சின்ன வயது ஞாபகம். ஆற்றங்கரை மணலில் வீடுகட்டிய ஞாபகம். ஓடியாடி அந்த வீட்டில் ஒருயுகம் வாழ்ந்துவிட்டு, வீட்டை கலைத்து கோவில்கட்டி பக்கத்து வீட்டு செம்பருத்தி பூவெல்லாம் பறித்து சாமிகும்பிட்டு, ஆற்றுநீரில் பன்னீர்தளித்து, பிரசாதமாய் நறுக்கிய கொய்யாகாய் சாப்பிட்டு பக்கத்து தாத்தா தோட்டத்து செடியெல்லாம் பிடிங்கி சாமியாடி, பூவரசஇலையில் செய்த பீப்பீ வைத்து கொல்லாக்கிளையில் டெல்லிக்கும், பாம்பேக்கும் வண்டி ஓட்டி வண்டி மிக வேகமாக போய்க்கொண்டிருக்கும் போது "மோனே.....,மோனே....." அடம்பிடித்த என்னை அத்தைவீட்டுக்கு கூட்டிப்போவதாக சொல்லி குளிப்பாட்டி, நல்ல மணமான சட்டை போட்டு தலைவாரி தாத்தா பக்கத்துல உக்காந்துக்கோ கண்ணா.. என்று சொல்லிச்சென்ற அம்மா திண்ணையில் நின்று கூப்பிடுவாள் .

ஆமாம். இப்ப எதுக்கு இந்த ஞாபகம் என்று கேட்கிறீர்களா?

அம்மா கூப்பிட்டதும் ஓடுவேன் வீட்டுக்கு. தலை, முகமெல்லாம் மண்ணாய் கையில் கோவில் சாமிக்க வாளுடன் அம்மா முன்னாடி போய் நின்று "யாம்மா?" என்று கேட்கும் போது என்னைப்பார்த்த அம்மாவின் முகத்தை பார்க்க வேண்டும்.


( கவிதைக்கும் எனக்கும் ரொம்ப தூரம். இல்லையென்றால் கவிதைபுனைந்திருப்பேன். )

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4