Google Groups Subscribe to முத்தமிழ்
Email:
Browse Archives at groups.google.com
Google Groups முத்தமிழ்
Browse Archives at groups.google.com

Thursday, April 06, 2006

கம்பனின் ஓவியமும் உள்ளமும் - இரவா

கம்பனின் ஓவியமும் உள்ளமும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இராமனின் கையிலுள்ள கோதண்டத்தில் பொருத்தக்கூடிய அம்பு இருக்கின்றதே, அது, எப்படிப் பட்டது! தெரியுமா? என்று, கூறவந்த கம்பன், அம்பையும் சொல்கிறான். தன் உள்ளக்கிடக்கையையும் கூறுகிறான்.


"நல் இயல் கவிஞர் நாவில்
பொருள் குறித்து அமர்ந்த நாமச்
சொல் என, செய்யுள் கொண்ட
தொடை என, தொடையை நோக்கி
எல்லை இல் செல்வம் தீரா
இசை என, பழுது இலாத
பல் அலங் காரப் பண்பே
காகுந்தன் பகழி மாதோ!


கவிஞன், தான் அதிகமாகப் பார்க்கும் பொருளை, எண்ணும் கருத்தையே தன் கவிதைகளில் உவமையாகக் கொள்வான். கம்பன் அதிகமாக எழுதுவது, கவிதை! கவிதையென்றால் எப்படியிருக்கவேண்டும்! என்று, விளக்குவது போலக் கூறுகின்றான்.


கவிதைக்குச் சொல் வேண்டும்! அச்சொல் துணிந்த சொல்லாக இருக்கவேண்டும்! உறுதியானச் சொல்லாகவும் இருக்கவேண்டும்! என்று கூறுவார்கள். அதைப் போலத் தேர்வுச் செய்யப்படும் சொல்லில் உறுதி இருக்கவேண்டும்.

செய்யுளை மாலைபோன்று கட்டுதற்கு, உருப்பிலக்கணத்தைக் கொண்ட தொடையலங்காரம் வேண்டும். அவ்வாறு அலங்காரம் செய்த செய்யுளைப் பாடுகின்ற போது, தொடையின் சிறப்பைத் தோற்றுவிப்பதுடன் எடுக்க எடுக்கத் தீராத செல்வத்தைப் போன்ற இசையைப் பெருக்கும்.


அதைப்போலவே, இராமன் கையில் இருக்கும் வில்லில் இருக்கும் அம்பும் குற்றம் என்று கூறமுடியாத அளவுக்குச் சிறப்புற்று விளங்கும் தன்மைகளைக் கொண்டிருக்கின்றது,

இரவா

--~--~---------~--~----~------------~-------~--~----~
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.
-~----------~----~----~----~------~----~------~--~---

Tuesday, April 04, 2006

த்வனி - அமுதன்

மாற்றாதே!
உன் ஸ்வரங்களை.
மாற்றங்கள்
மறுக்கமுடியாதவை
என அறிந்தாலும்...
நான் அறிந்த நீ
நீ அறிந்த நான்
என்றும் மாறாமல்
இருக்க
வேண்டுமெனும் மனது.
காற்றில் அசையும் திரைச்சீலை,
சீற்றத்தில் ஆடலாம் மனது.
ஆயினும்
உன் ஒவ்வொரு மௌனமும்
என்னுள் நிலநடுக்கத்தை
உருவாக்கவல்லன என அறிந்து கொள்.
உன் சொல்லின் ஒவ்வொரு
அட்சரமும்
பதம் பார்த்து சுவைத்து
உண்டவை.
அதில் ருசி பேதம் எழும்போது
சுடும் நாக்கு..
இதயத்துடிப்பு
சீராக இருத்தல் போல்
இருக்கவே விரும்புகிறது
நம் உறவு.
மாற்றங்கள் மறுக்கமுடியாதவை
எனத்தெரிந்த பின்னும்

அமுதன்



--
அற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா
அற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா!
Looking for Miracles? Be the Miracle!!

Monday, April 03, 2006

மௌன ஒலி - லாவண்யா

முத்தமிழ் கூகிள் குழுமத்தில் லாவண்யா எழுதிய கவிதை மணக்கும் கட்டுரை

"Pin drop silence"

அமைதி அல்லது மௌனமான ஒரு இடத்தை,நிகழ்வைக் குறிக்கும் மேற்கோள் தானே மேலே சொன்னது. ஒரு குண்டூசியைத் தரையில்
எறிந்தால் அதன் சப்தம் சற்று அமைதியான பகுதியில் காதில் கேட்கும் அளவில் இருக்கும். இது ஒரு சாத்தியமான விசயம். ஆனால்
இதை விட அழமான கொடூரமான மௌனத்தை பற்றிய சங்க கால கவிதை ஒன்று உள்ளது.

கொன்னுர் துயிலினும் யாந்துங் சலமே
எம்இல் அயல ஏழில் உம்பர்
மயிலடி இலைய மாக்குரல் நொச்சி
அணிமிகு மென்கொம்பு ஊழ்த்த
மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே.


உரை:
---

இந்த பெரிய ஊர் தூங்கிய பிறகும் நாங்கள் தூங்கவில்லை. எங்கள் வீட்டின் அருகே ஏழிலைப் பாலை மரத்துக்கு அப்பாலுள்ள மயிற் பாதம்
போன்ற இலைகளும் பெரிய பூங்கொத்துகளும் கொண்ட நொச்சி மரத்தின் அழகிய கொம்பில் இருந்து உதிர்ந்த நீலமணி போன்ற மலர்களின்
ஒலியைக் கேட்டபடி இரவெல்லாம் படுத்திருந்தோம்.

நன்றி ஜெயமோகன் "சங்கச் சித்திரங்கள்"


இந்த சங்க பாடல் ஒரு உக்கிரமான மௌனத்தை பேசுகிறது. ஊர் உறங்கிவிட்ட வேளை. தூங்க முடியாத இருவர், சற்று தொலைவில்
உள்ள ஒரு மரத்திலிருந்து உதிரும் பூ ஒன்றின் ஒலியை கேட்டுக் கொண்டு இரவெல்லாம் தூங்காது இருப்பதாக வருகிறது. மேலோட்டமாக
பார்த்தால் இது ஒரு அழமான சோகம் போல தெரிந்தாலும் உற்று கவனித்தால்,இலைகளை மயிற் பாதங்களுக்கு ஒப்பிட்ட கவிஞன் பெரிய
பூங்கொத்துகளை நினைவில் கொணரும் கவிஞன் உதிரும் பூ நீலமணி போலிருக்கும் என்று நினைவு கூரும் கவிஞன் சோகமாக இருக்க
வாய்பில்லை என்றும் கொள்ளலாம். மலர் உதிரும் ஒலியை கேட்பது சாத்தியமா என்ற வாதத்தை விடுத்து உறங்காமல் தவிக்கும் அந்த இருவர்
பற்றி சிந்திதேன். என் சிந்தனையில் வந்து போனது நான்கு விதமான உறவாகும்.

நட்பு
--------

நண்பர்களுக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக ஒரு சண்டை என கொள்வோம். சண்டை முடிந்திருக்கும் ஆனால் அதன் சாரம்
போகாதிருக்கும்.நீ என்ன அவ்வளவு பெரியவனா என்ற எண்ணம் இருவருக்கும் இருக்கும். ஆனால் நட்பும் மேலோங்கி நிற்கும்.
பேச முடியாது. ஒரே அறையில் இருவரும் அடுத்தவன் வந்து பேசுவான் என்ற நினைப்போடு உறங்காமல் படுத்து இருப்பார்கள்.

நீண்ட நாட்களுக்கு பின் கூடிய பழைய நண்பர்கள் இருவர். நிறைய பேசி மகிழ்ந்து,பிரிந்து செல்ல வேண்டிய நாளின் முதல் நாள் இரவு.
மிக சந்தோசமான மனநிலையில் நாம் இருக்கும் போது ஒரு சில பயணங்கள் முடியக் கூடாது என்று நினைப்போம்.அது போல அந்த இரவு
முடியாமல் தொடரக் கூடாதா என்று நினைத்தவாறு இருவரும் தூங்காமல் பேசாமல் தாங்கள் மகிழ்ந்து களித்த தருணங்களை நினைத்தபடி
படுத்துக்கிடப்பார்கள்.

தாய் மகள்
------------------

மகளை திருமணம் முடித்து கொடுத்த பெற்றோர் அவளை காண அவள் வீடு வந்திருக்கின்றனர். திருமணம் மற்றும் தலை தீபாவளி,
பொங்கல், ஆடி இப்படி பல பண்டிகைக்கு தரப்பட்ட சீர் சரியில்லை என்கிற சண்டை. வீடு தேடி வந்த பெற்றோரை அவமான செய்த
கணவனையும் கணவர் வீட்டாரையும் ஒன்றும் செய்ய முடியாத கையாலாகாத பெண், தன் மகளை இப்படி பட்ட பேய்களிடையே விட்டு
விட்டோமே என்று தாய், அவர்களும் ஒரே வீட்டில் ஒர் இரவில் உறங்காது இருப்பார்கள் அப்போது மலர் உதிரும் ஒலி என்ன கண்ணில்
இருந்து கன்னங்களில் கண்ணீர் வழியும் ஒலியைக் கூட கேட்க முடியும்.

கணவன் மனைவி
---------------------------------

இந்த உறவில் மலர் உதிரும் ஒலியை கேட்டு கொண்டே ஒருவரோடு ஒருவர் பேசமல் படுத்திருப்பார்கள் என்றால் அதைவிட கொடுமை
உலகில் வேறொன்றும் இருக்க முடியாது. ஆனால் இந்த கவிதைக்கு இந்த உறவை வைத்து நான் சிந்தித்தது வேறு விதமாகும்.

"நான் கேட்கும்
எந்த ஒரு கேள்விக்கும்
உடன் பதில் வைத்திருகிறாய்
அழகாய், அது
உன் மௌனம். " - நன்றி நிலா ரசிகன்

இந்த கவி வரிகளில் ஒரு ஏக்கமில்லை, ஒரு சாடல் இல்லை. இதில் ஒரு சந்தோசம் தான் தெரிகிறது. என் மௌனம் சொல்லாத எதையும்
என் வார்த்தைகள் சொல்ல போவது இல்லை என்ற புரிதல்(understanding) கணவன் மனைவிக்குள் இருந்தால், இருவரும் "மயிற் பாதம்
போன்ற இலைகளும் பெரிய பூங்கொத்துகளும் கொண்ட நொச்சி மரத்தின் அழகிய கொம்பில் இருந்து உதிர்ந்த நீலமணி போன்ற மலர்களின்
ஒலியைக் கேட்டபடி இரவெல்லாம் படுத்திருந்தோம்" என படுத்திருக்கலாம்.

காதலன் காதலி
---------------------------

காதலிக்கும் சமயம் இருவரும் வேறு வேறு வீடுகளில் தான் இருப்பார்கள். ஆயினும் சிந்தனை ஒரே புள்ளியில் தான் இருக்கும். ஒருவேளை
கற்பனையில் அவர்கள் வீட்டுக்கு பக்கத்தில் ஏழிலைப் பாலை மரத்துக்கு அப்பாலுள்ள பெரிய பூங்கொத்துகளும் கொண்ட நொச்சி மரத்தின்
இருந்து உதிரும் நீலமணி மலர்களின் ஒலியைக் கேட்டபடி இருவரும் அவர் அவர் வீட்டில் உறங்காமல் படுத்து இருப்பர். கற்பனையில் மட்டுமே
மலர் உதிரும் ஒலியை காதில் கேட்க முடியும்.

Sunday, April 02, 2006

சொல்லிக்கொடு பேரனே - விகே.பெரியசாமி

சொல்லிக்கொடு பேரனே!!

போர் முரசு கேட்க்குது
தெற்குப்புற மிருந்து -
இனி -
சரவெடிகளாய் குண்டுகள் வீழும் -
சுவரெல்லாம் சல்லடையாய்
கோலம் போடும்.
போராட நம் வீட்டில் யார் இனி??
நீயா??
என் வயிற்றில் இருக்கும்
வரி வரியான சுருக்கங்கள் -
உன் தந்தையை
என் கருவில்
சுமக்கையில் வந்தவை!!

அவனைப் பெற்ற வயிறு இங்கே!!
அவன் எங்கே!!
ஆறடி உயரம் -
ஆல மரம் அவன் - ஆனால்
விதையாகிப் போனான் -
அன்னை மண் காக்க
ஆறு வருடங்களுக்கு முன்
அவன் வீழ்ந்த போது
உனக்கு வயது
ஒன்று தானே!!

எதிரியின் குண்டு
சுவற்றை மட்டுமா
துழைத்த்து? - உன்
அன்னையின் உடலையும் தான்!!

என் குல விளக்கே!! -
நாளை விடுதலையாகும்
ந்ம் மண்ணில் வாழ
குழந்தைகள் தேவை -

பருந்துகளையும்
குள்ள நரிகளையும்
எதிர்க்க கோழிக் குஞ்சுகளா??
நீ ஒதுங்கி நில் என் பேரனே!!
நான் எதிர்ப்பேன்!!
என் வயது
எழுபது தான்!!
என்றாலும் -
என்னுள் ஓடுவது
தமிழ் இரத்தம்!!

என் கரு சுமர்ந்த மகனையும்-
என் ராசாத்தி மருமகளையும்
இயந்திரத் துப்பாக்கியின்
இலக்காக வைத்தவனை
நான் எதிப்பேன் -

நாளை
விடுதலைப் பெறப்போகும்
நம் நாட்டில் வாழுதற்க்கு
நீ வேண்டும்!!

எங்கே ஒரு துப்பாக்கி??
என்னிடம் கொடு!!
இதை எப்படி இயக்குவது?? - அதை
எனக்கு சொல்லிக் கொடு
என் பேரனே!!!


--
என்றும்
நட்புடன்
விகே.பெரியசாமி.

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4