Google Groups Subscribe to முத்தமிழ்
Email:
Browse Archives at groups.google.com
Google Groups முத்தமிழ்
Browse Archives at groups.google.com

Tuesday, April 25, 2006

வாழைக்காய்க்கும் கோவைக்காய்க்கும் கல்யாணம

வாழைக்காய்க்கும் கோவைக்காய்க்கும் கல்யாணம்
அந்த பச்சமொளகா கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
அந்த கோயம்பேட்டில் நடக்குதையா திருமணம்
அங்கு கூடைக்கார ஆளுங்கெல்லாம் கும்மாளம்

ஓஹோ … ஒஹோ… . ஒஹோ… .ஒஹோ …

கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்

வாழைக்காய்க்கும் கோவைக்காய்க்கும் கல்யாணம்
அந்த பச்சமொளகா கூட்டம் எல்லாம் ஊர்கோலம்
ஊர்வலத்தில் ஆடிவரும் அவரெக்காய் தானே நாட்டியம்
அய்யா மேளதாளம் முழங்கி வரும் கத்திரிக்காயின் வாத்தியம்
ஊர்வலத்தில் ஆடிவரும் அவரெக்காய் தானே நாட்டியம்
அய்யா மேளதாளம் முழங்கி வரும் கத்திரிக்காயின் வாத்தியம்

பூசனிக்காய் நடத்திவர்ற பார்ட்டியும்
நம்ம பூசனிக்காய் நடத்திவர்ற பார்ட்டியும்
அங்கே தேர் போலெ போகுதய்யா ஊர்க்கோலக் காட்சியும்

ஊர்க்கோலக் காட்சியும்
வாழைக்காய்க்கும் கோவைக்காய்க்கும் கல்யாணம்
அந்த பச்சமொளகா கூட்டம் எல்லாம் ஊர்கோலம்

லாரி காயும் மணலில் சேரும் அந்த இட முங்கோ
இதெ பார்த்துவிட்ட வாழத்தண்டு வச்சதையா வத்திங்கோ
கூவம் ஆறு கடலில் சேரும் அந்த இடமுங்கோ
இதெ பார்த்துவிட்ட வாழத்தண்டு வச்சதையா வத்திங்கோ

பஞ்சாயத்து தலைவரான குடமிளகாய் தானுங்கோ
அவர் சொன்னப்படி இருவருக்கும் நிச்சயதார்த்தம் தானுங்கோ
கல்யாணமும் நடந்து வருது பாருங்கோ

வாழைக்காய்க்கும் கோவைக்காய்க்கும் கல்யாணம்
அந்த பச்சமொளகா கூட்டம் எல்லாம் ஊர்கோலம்

மாப்பிள்ளை சொந்த பந்தம் கிழங்குக்கார உருளைங்கோ
அந்த நெத்திலி பொடியெ, காரப்பொடியெ கலக்கலானு இருக்குது
மாப்பிள்ளை சொந்த பந்தம் கிழங்குக்கார உருளைங்கோ
அந்த நெத்திலி பொடியெ, காரப்பொடியெ கலக்கலானு இருக்குது

பொண்ணுக்கு சொந்த பந்தம் கிழங்குக்கார சேனை
பொண்ணுக்கு சொந்த பந்தம் இலைவகை சேனை
அந்த அவரைக்காயா கொத்தவரங்காயா ருசி எல்லாம் தருகுது

வாழைக்காய்க்கும் கோவைக்காய்க்கும் கல்யாணம்
அந்த பச்சமொளகா கூட்டம் எல்லாம் ஊர்கோலம்

மாப்பிள்ளெ வாழக்காய் திருநெல்வேலி தானுங்கோ
அந்த மணப்பொண்ணும் கோவைக்காய் வேலூரு தானுங்கோ
மாப்பிள்ளெ வாழக்காய் திருநெல்வேலி தானுங்கோ
அந்த மணப்பொண்ணும் கோவைக்காய் வேலூரு தானுங்கோ

இந்த திருமணத்தெ நடத்திவைக்கும் பீர்க்கங்காய் ஆருங்கோ!!?

இந்த மணமக்களெ வாழ்த்துகின்ற பெரிய மணுச யாருங்கோ

தலைவரு கொத்தமல்லி தானுங்கோ!!

---------------
ஹைமா

--~--~---------~--~----~------------~-------~--~----~
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.
-~----------~----~----~----~------~----~------~--~---

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: .-
5>&'5$, 5'$
4